மிக்ஜாம் புயல் பொது சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவுறுத்தல்
மிக்ஜாம் புயல் பொது சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவுறுத்தல்
பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில்
தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்!
அவரச கால மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்!
நிவாரண மையங்களில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்!
தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்!
நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்!
ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவரச கால மருந்துகளைத் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்!
சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்!
போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்!என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்