புயல் கரையை கடக்கும் போது பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
அட்மின் மீடியா
0
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்...
புயல் கரையை கடக்கும் போது பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
- புயல் காலங்களில் வீட்டில் இருப்பவர்கள் பதற்றத்தை தனித்து அமைதி காக்க வேண்டும்.
- வீட்டின் அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.
- புயல் காலகட்டத்தில் 4 நாட்களுக்கு தேவையான பொருட்களான உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்
- வீட்டில் உள்ள ஆவணங்களையும், விலை உயர்ந்த பொருட்களையும், தண்ணீர் புகாத அளவுக்கான இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
- வீட்டில் உள்ளவர்கள் காய்ச்சிய குடிநீரை பருகவேண்டும்,
- மரத்தடியில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.
- புயல் கரையைக் கடக்கும்போது வாகனத்தில் பயணிக்கூடாது. புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்.
- புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென குறையும், அதனால் புயல் கரையை கடந்துவிட்டதாக எண்ணக்கூடாது. ஏனெனில் மந்த நிலைக்குப் பின் மீண்டும் சூரைக் காற்று வீசும். புயல் கரையை கடந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்னரே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும்.
- புயல் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களையும், பீதியையும் யாரும் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அறிவுரைகளுக்கு வானொலி தொலைக்காட்சி, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முகநூல் மற்றும் ட்விட்டரை முறையாக பார்க்கவும்.
- புயல் எச்சரிக்கை என்பதால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்கவும்; குழந்தைகளை தண்ணீரில் விளையாட அனுமதிக்க வேண்டாம்.
- கனமழை பெய்யும் போது மரத்திற்கு அடியில் நிற்க வேண்டாம்.
- அடுக்குமாடி குடியிருப்பில் வாசிப்பவர்கள் தொட்டிகளில் போதுமான நீரை தேக்கி வைத்துக் கொள்வது நல்லது.
- மழையின் போது மின்சாரம் தடைப்பட வாய்ப்புள்ளதால் மின்விளக்கு, செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றி வைத்து கொள்ளவும்;
- தேவையான மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகளை வைத்திருக்கவும்.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அதிகாரிகள் அறிவுறுத்தும் போது நிவாரண முகாம்களுக்கு செல்லவும்.
- மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்
- புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.
- இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்
- மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே நீர் மோட்டர் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்
- மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்
- செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள் பாட்டுக்கேட்பது வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்
- பழுதடைந்த கட்டிடங்களுக்குள் அடைக்கலம் புகவேண்டாம்
- உங்களது வீடு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தீர்கள் என்றால், புயல் வீசத் தொடங்கும் முன்பாகவே, பாதுகாப்பான, வேறு இடத்திற்கு சென்று விடவும்
- இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள் மேலும்
பிஸ்கட்
பால்
பிரட்
அவசர மாத்திரைகள்
தண்ணீர் கேன்
பேட்டரி செல்கள்
மெழுகுவர்த்தி
காய்கறிகள்
மளிகை சாமான்களை முன்னதாக தயாராக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்
குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்
குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்
கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்
பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள்
மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்
மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே ஜாக்கிரதை
மக்கள் நலனில் என்றும்
Tags: தமிழக செய்திகள்