Breaking News

தெலுங்கானாவில் அசாதுதீன் ஓவைசி கட்சி 7 இடங்களில் முன்னிலை முழு விவரம் AIMIM Telangana results

அட்மின் மீடியா
0

தெலங்கானாவில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்ட்ர சமிதி ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது, ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30 ம்தேதி நடைபெற்றது அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கட்டுள்ளது அதன்படி தெலுங்கானாவில் காங்கிரஸ், பாஜகவும் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. 

119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில்  காங்கிரஸ் முன்னிலை வகித்துவருகிறது. ஆட்சி அமைக்க அதிகப்பட்சமாக 60 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி சுமார் 64 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகுத்து வருகிறது. 

ஆளும் கட்சியான பாரத ராஷ்ட்ர சமிதி 40 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். அதேபோல் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி தெலுங்கானாவில் 7  தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

சட்டமன்ற தொகுதி:-

Malakpet என்ற சட்டமன்ற தொகுதியில்  அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் AHMED BIN ABDULLAH BALALA முன்னிலையில் உள்ளார்

Nampally என்ற சட்டமன்ற தொகுதியில்  அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் MOHAMMED MAJID HUSSAIN முன்னிலையில் உள்ளார்

Charminar என்ற சட்டமன்ற தொகுதியில்  அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் MIR ZULFEQAR ALI முன்னிலையில் உள்ளார்

Chandrayangutta என்ற சட்டமன்ற தொகுதியில்  அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர்  Akbar Uddin Owaisi முன்னிலையில் உள்ளார்

Yakutpura என்ற சட்டமன்ற தொகுதியில்  அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் JAFFAR HUSSAIN முன்னிலையில் உள்ளார்

Bahadurpura என்ற சட்டமன்ற தொகுதியில்  அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர்  MOHAMMED MUBEEN முன்னிலையில் உள்ளார்

Karwan என்ற சட்டமன்ற தொகுதியில்  அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர்  KAUSAR MOHIUDDIN முன்னிலையில் உள்ளார்


தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க:-

CLICK HERE

https://results.eci.gov.in/AcResultGenDecNew2023/partywiseresult-S29.htm


தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு படி, ஏஐஎம்ஐஎம் சுமார் 7 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.கடந்த 2018 ஆம் ஆண்டு 8 இடங்களில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களை கைப்பற்றியது.

தற்போது தெலுங்கானாவில் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி, சார்மினார், பகதூர்புரா, மலக்பேட், சந்திரயாங்குட்டா, நாம்பள்ளி, யாகுத்புரா, கார்வான், ராஜேந்திர நகர் மற்றும் ஜூப்ளி ஹில்ஸ் ஆகிய 9 தொகுதிகளில் களம் கண்டது  

அதன்படி தற்போது சார்மினார், நாம்பள்ளி, மலக்பேட், சந்திரயாங்குட்டா, யாகுத்புரா, பகதூர்புரா, கார்வான், ஆகிய 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது

மீதம் உள்ள  ராஜேந்திர நகர் மற்றும் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்கள் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தி பின் தங்கி உள்ளார்கள்

ஒரு வேளை ஒவைசி கட்சியினர் தாங்கள் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் அவர்கள் பிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள். அப்படி ஆதரவளித்தால் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback