ஊர்க்காவல் படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் முழு விவரம் Tamilnadu Home Guard Recruitment 2023 | oor kaval padai
சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு:-
ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்விதகுதி:-
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள்:-
குற்றப் பின்னனி இல்லாத, நன்னடத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
ரேஷன் கார்டு உடையவராக இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு 45 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடித்த பின்னர், அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உதவுவதற்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.
சீருடை, தொப்பி மற்றும் காலணிஆகியவை காவல் துறையால் வழங்கப்படும். இரவு ரோந்துப் பணி, பகல் ரோந்துப் பணி மற்றும் போக்குவரத்துப் பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.
பெண்களுக்கு பகல் ரோந்துப் பணி மட்டும் வழங்கப்படும்.
சிறப்பான முறையில் பணிபுரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும்குடியரசுத் தலைவர் பதக்கம் ஆகியவை தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி:-
ஊர்க்காவல் படை தலைமை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை-15 என்ற முகவரியில் விண்ணப்பப் படிவங்களை இலவசமாகப் பெற்று, அவற்றை சரியாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் இணைத்து வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்
தபால் முகவரி:-
சென்னை ஊர்க்காவல் படை தலைமை அலுவலகம்,
சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்,
அண்ணா சாலை,
சைதாப்பேட்டை,
சென்னை-15
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
31.08.2023
நீட்டிக்கபட்ட கடைசி நாள் :-10.09.2023
Tags: வேலைவாய்ப்பு