Breaking News

விமானம் ரத்து செய்யப்பட்டாலோ, தாமதமானாலோ, பயணிகளுக்கு 200 % இழப்பீடு சவூதி அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், விமானம் அல்லது விமான நிலைய இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக, புதிய பயணிகள் உரிமை பாதுகாப்பு விதிமுறைகளை சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (GACA) வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது. 



சவுதி அரேபியாவின் சிவில் விமானப்போக்குவரத்து பொது ஆணையம் (GACA), பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் தற்பொழுது அமலில் இருக்கும் பழைய விதிமுறைகளுக்கு பதிலாக விமானம் அல்லது ஏர்போர்ட்டினால் பாதிப்படையும் பயணிகளுக்கு புதிய நிர்வாக ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடைமுறையானது நவம்பர் 20, 2023 தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.


புதிய ஒழுங்கு முறை விதிமுறைகள் சிறப்பம்சங்கள்:-

  • கால அட்டவணைக்கு முன்னதாக விமானம் புறப்பட்டாலோ அல்லது புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலோ, அதிக முன்பதிவு காரணமாக விமானத்தில் ஏற்ற மறுத்தாலோ பயணிகளுக்கு டிக்கெட் மதிப்பில் 150 சதவீதம் முதல் 200 சதவீதம் இழப்பீடு வழங்கப்படும்.
  • பயணிகள் லக்கேஜ்களை இழந்தாலோ ,தொலைந்து போனாலோ அல்லது லக்கேஜ் பொருட்களில் குறைபாடு அல்லது தாமதம் ஏற்பட்டாலோ, பயணிகளுக்கு6,568 சவுதி ரியால்கள் (Dh6,432) இழப்பீடு வழங்கப்படும்
  • டிக்கெட் முன்பதிவை உறுதிப்படுத்தும் போது அறிவிக்கப்படாத நிறுத்தங்களை விமான நிறுவனம் சேர்த்தாலும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். 
  • இந்த விதிமுறைகள் ஹஜ் மற்றும் உம்ரா பட்டய விமானங்களுக்கும் பொருந்தும்.  
  • இந்த மாற்றங்கள் பயணிகளுக்கு சிறந்த சேவைத் தரத்தைப் பாதுகாக்கும் விதிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம், பயணிகளுக்கு முதலிடம் கொடுப்பதில் காக்காவின் கவனத்தை பிரதிபலிக்கிறது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback