ஆடிப்பூரத்தை முன்னிட்டு 21 ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு aadi pooram local holiday | Melmaruvathur Adhiparasakthi temple Aadi Pooram
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும், ஆடிப்பூரம் சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 1972ம் ஆண்டு முதல் இக்கோயிலில் ஆடிப்பூரம் விழா கொண்டாடப்படுகிறது
அந்தவகையில் இந்த ஆண்டு 52 வது ஆடிப்பூரம் விழா கோலாகலமாக ஜூலை 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் மேல்மருவத்தூர் கோவிலில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில்:-
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது
மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்திட 05.08.2023 அண்ரு (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்