Breaking News

1 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் வீடியோ வடிவில் படிக்க மணற்கேணி ஆப் TNSED Manarkeni Learning App Download Link

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அரசு எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டிலேயே முதன் முறையாக காணொலி வாயிலாக பாடங்களை கற்பிக்கும் மணற்கேணி என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது, நம் கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும் இருப்பில் வைப்பதும் வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும் சுவாரஸ்யமானதாக மாற்றவுமே காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.

                                           

தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கென உள்ள பாடங்களை 27,000 கருப்பொருள்களாக வகுப்புகள் தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை உருவாக்கி அளித்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை நாட்டிலேயே முதன் முதலாக ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுனர்களைக் கொண்டு உருவாக்கியுள்ள இத்தகைய செயலி இதுவே.

இச்செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் துணைகொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆப் பயன்படுத்தி ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் துணைக்கொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப் டவுன்லோடு செய்ய:-

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback