பிங்க் வாட்ஸ்அப் என்ற பெயரில் பரவும் வைரஸ் .. தடுக்க என்ன செய்ய வேண்டும் முழு விவரம் pink whatsapp | pink whatsapp app
வாட்ஸ்-அப் பிங்க் எனும் பெயரில் வாட்ஸ்அப் லோகோவின் பச்சை நிறத்தை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதாகக் கூறும் லின்ங் ஒன்று வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பப்படுகிறது.
வாட்ஸ்அப் பிங்க் என்பது அடிப்படையில் தீம்பொருள் அல்லது தீங்கிழைக்கும் ஒரு கணினி நிரல். இந்த தீம்பொருள் .இந்த புதிய தீம்பொருளால் பாதிக்கப்பட்டால் சாதனத்தின் கட்டுப்பாட்டையும் அதில் உள்ள தரவையும் முழுமையாக இழக்க நேரிடும். வைரஸ் நிறுவப்படும் தொலைபேசியில் ஹேக்கருக்கு முழுமையான அணுகலை இந்த வைரஸ் வழங்கும்.தீங்கு விளைவிக்கும்
வாட்ஸ்அப் பிங்க்கை பதிவிறக்கம் செய்ய பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்யுமாறு கேட்கப்படுவார்கள். இணைப்பைக் கிளிக் செய்யும் எந்தவொரு பயனரும் APK பதிவிறக்கத்திற்கு திருப்பி விடப்படுவார் பதிவிறக்கம் செய்யப்படும் இக் கோப்பிலேயே வைரஸ் மறைந்திருக்கும்.பயனர்கள் புதிய வாட்ஸ்-அப் செயலியை நிறுவும் ஆர்வத்தில், அவர்கள் ஒரு வைரஸைப் பதிவிறக்கி ஏமாற்றப்படுகிறார்கள். மேலும், ஸ்மார்ட்போனில் வைரஸ் கேட்கும் அனுமதிகளை உடனடியாக வழங்குகிறார்கள்.
என்ன நடக்கின்றது வாட்ஸப்பில்:-
இந்த லிங்கை தொட்டாலே பதிவிறக்கம் செய்யப்பட்டு உடனடியாக அவர்களது தகவல்கள் திருடப்பட்டு விடுவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை பயனர்கள் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என மிகுந்த எச்சரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தடுக்க என்ன செய்யவேண்டும்:-
இந்த வைரஸை கட்டு படுத்த ஒரே வழி அதனை யாரும் தொடக்கூடாது, கிளிக் செய்யகூடாது , உடனடியாக கிளியர் சாட் கொடுத்து விடுங்கள் அவ்வளவு தான்
எந்த செயலியாக இருந்தாலும் கூகுளின் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்வதுதான் சிறந்தது. இணையத்தில் இருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிருங்கள். எந்த செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்றாலும் ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்துகொள்ளலாம்.
சைபர் க்ரைம் செக்யூரிட்டி போலிஸ் ராஜஹாரியா தனது ட்விட்டர் பக்கத்தில்
இந்த செயலியை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்செல்போன் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்ட இந்த பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியானது மிகவும் ஆபத்தானது என்பதும், இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்தால் செல்போனில் உள்ள அனைத்து தகவல்களும் ஹேக் செய்யப்படும் என்பதும் தெரியவந்துள்ளது என கூறிய அவர் அந்த லின்ங்கை தொடாதீர்கள் என கூறியுள்ளார்
பலரும் ஷேர் செய்யும் அந்த பின்ங் வாட்ஸப் கடந்த 2021 ம் ஆண்டு மிக வேகமாக வாட்ஸப்பில் பரவியது
அப்போது நம் அட்மின் மீடியா அந்த வைரஸ் பற்றி வாட்ஸப்பில் எச்சரிக்கை கொடுத்து கட்டுபடுத்தியது அந்த செய்தியினை படிக்க
இது போல் உங்கள் வாட்ஸப் குருப்பில் வரும் லின்ங்கை கிளிக் செய்யாதீங்க அது ஓர் வைரஸ் லின்ங்
Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி