பட்டபகலில் நடுரோட்டில் துப்பாக்கி முனையில் காரை வழிமறித்து கொள்ளை அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த டெலிவரி ஏஜென்ட் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபோது பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் அருகே ஹெல்மெட் அணிந்த 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் காரை காரை வழிமறித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி காரில் பணம் வைத்திருந்த 2 லட்சம் பணபையை எடுத்துகொண்டு பைக்கில் அங்கிருந்து சென்றனர்
இந்த சம்பவத்தை கேள்வி பட்டு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் பிரகதி மைதான் சுரங்கப்பாதை கொள்ளை சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற நபர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சுரங்கப்பாதையில் நடந்த இந்த வழிப்பறி தொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/news24tvchannel/status/1673202483139694592
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ