Breaking News

வாட்ஸ் ஆப் போல் டிவிட்டரில் ஆடியோ வீடியோ கால் வசதி…எலான் மஸ்க் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வாட்ஸ் ஆப் போல் டிவிட்டரில் ஆடியோ -வீடியோ கால் வசதி…எலான் மஸ்க் அறிவிப்பு


உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பின் படி  மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கினார்

அதன்பின்பு டிவிட்டரில் பல மாறுதல்கள் அப்டேட்கள் கொடுத்து வருகின்றார் இந்நிலையில் டிவிட்டரில் நாம் மற்றவர்களுடன் பேசுவதற்கு மெசேஜ் செய்யும் வசதிகள் இருக்கிறது. ஆனால், பயனர்கள் கால் செய்து பேசும் வசதி இல்லை. இந்நிலையில் எலான் மஸ்க் தன் டிவிட்டரில் 

டிவிட்டரில் இனிமேல் குரல் மற்றும் வீடியோ கால விரைவில் வரும், எனவே உங்கள் ஃபோன் எண்ணைக் கொடுக்காமலேயே உலகில் எங்கிருந்தாலும் அவர்களிடம் பேசலாம்” என அறிவித்துள்ளார்.

மேலும், நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகள் இருந்தால் அவர்களுடைய கணக்கை நீக்கம் செய்யப்பட போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback