Breaking News

பக்ரீத் பண்டிகையின்போது பசுக்களை அறுத்து பலியிட வேண்டாம்- ஜாமியத் உலமா கோரிக்கை

அட்மின் மீடியா
0

பக்ரீத் பண்டிகையின்போது முஸ்லிம்கள் பசுவை பலியிட வேண்டாம்” என, ‘ஜாமியத் உலமா’வின் அசாம் பிரிவு அறிவித்துள்ளது.


இதுகுறித்து, அதன் தலைவர் பதுருதீன் அஜ்மல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஹிந்துக்கள் பசுவை புனிதமாக மதிக்கின்றனர் என்பதால் அவர்களின் உணர்சுகளுக்கு மதிப்பளித்து, பக்ரீத் பண்டிகையின் போது, பசுமாட்டை பலியிடுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும்.அதற்கு பதிலாக ஆடு, எருமை, ஒட்டகம், காளை ஆகியவற்றை பலியிட்டு ‘குர்பானி’ கொடுக்கலாம்.  கடந்த 2008-ஆம் ஆண்டே இதுதொடா்பாக அறிவுறுத்தல் உள்ளது. இப்போது மீண்டும் அதனை நான் நினைவூட்டி அறிவுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளாா். பக்ருதீன் அஜ்மல், அகில இந்திய ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவா் ஆவாா். அஸ்ஸாம் சட்டப் பேரவையில் பாஜக, காங்கிரஸை அடுத்து 15 எம்எல்ஏக்களுடன் பெரிய கட்சியாக இது திகழ்கிறது.பக்ருதீன் அஜ்மல் அஸ்ஸாமின் தூப்ரி மக்களவை தொகுதி எம்.பி.யாகவும் உள்ளாா்.

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback