அதிமுக பொதுக்குழு- போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு மாற்று பாதையில் செல்லவும் சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தங்கள் பயண வழித்தடத்தை மாற்றி செல்லுமாறு சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்
சென்னை வானகரம் அருகில் நாளை (11.06.2022) நடைபெறும் நிகழ்ச்சியையொட்டி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகவே வாகன ஓட்டிகள், பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளாதவண்ணம் தங்களது பயணங்களை முன்னேற்பாடாக மாற்றி அமைத்துக்கொள்ளவும், மாற்று பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்