இனி எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்கக் கூடாது - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இனி எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்கக் கூடாது - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு
பேருந்துகளில் கொடுக்கப்படும் பயணச்சீட்டை எச்சில் தொட்டு கொடுக்கக்கூடாது என சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்;பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நடத்துநர்கள் பயணச்சீட்டு வழங்கும்போது எச்சில் தொட்டு கொடுக்க கூடாது; இதனால் பயணிகளுக்கு மன உளைச்சலும், சுகாரதார சீர்கேடும் ஏற்படுவதால் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் எச்சிலுக்கு பதிலாக தண்ணீரை உறிஞ்சும் Sponge-ஐ பயன்படுத்த வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்