Breaking News

தமிழகத்தில் LKG,UKG சேர்க்கை நடத்த தமிழக அரசு உத்தரவு!!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கை நடத்த தொடக்கக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டன. இதற்காக 2,381 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் இந்த இரு வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறாது என கல்வித் துறை ஏற்க்கனவே அறிவித்திருந்தது.

தற்போது தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கை நடத்த தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . 2,381 மையங்களில் மாணவர்களை சேர்க்கலாம் என அறிவித்துள்ள நிலையில், சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை, அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு தலைமை ஆசிரியர்கள் வகுப்புகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கை நடைபெறாதது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தொடக்கக்கல்வி இயக்குனர் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback