Breaking News

உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்களை தோப்புகரணம் போடவைத்து ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி மிரட்டிய நபர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

உ.பி.யில் இஸ்லாமியர்கள் மீது வாலிபர்கள் சரமாரி தாக்குதல்; கட்டையால் மிரட்டும் வீடியோ வைரல்2022-06-09@ 18:18:23கோண்டா: உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய ஃபக்கிரிகள் மீது சில இளைஞர்கள், கட்டையால் மிரட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபிகள் நாயகம் தொடர்பாக பாஜ பெண் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா, சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவரையும், அவரது கருத்துக்கு ஆதரவாக டெல்லி பாஜவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் பதிவிட்டார்.இருவர் மீதும் பாஜ நடவடிக்கை எடுத்துள்ளது. 



இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், தேகூர் கிராமத்தில் உள்ள கோண்டா பகுதிக்குச் சென்ற 3 இஸ்லாமிய பக்கிரிகளை வழிமறித்த சில இந்து இளைஞர்கள், “உங்களுடைய பெயர் என்ன... நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்... நீங்கள் ஆதார் அட்டையை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் தாக்கப்படுவீர்கள். ஜிஹாதிகள், பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவீர்கள்” என மிரட்டி கையில் கட்டைகளை வைத்து கொண்டு, அவர்களை தீவிரவாதிகள் என அழைத்ததோடு இஸ்லாமியர்களை தோப்புக்கரணம் போட வைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட சொல்லியும் அந்த வாலிபர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். 

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இஸ்லாமியர்களிடம் மதரீதியாக தவறாக நடந்து கொண்ட நபர்களை கைது செய்திருப்பதாக கொண்டா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


வீடியோ பார்க்க:-

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback