Breaking News

சீன நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா தடை! முழு விவரம்

அட்மின் மீடியா
0

சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு (ஐஏடிஏ) விடுத்துள்ள சுற்றறிக்கையில், ‘சீன மக்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசா இனி செல்லாது. அதேபோல், 10 ஆண்டுகளுக்கான சுற்றுலா விசாவும் செல்லாது. பூடான், மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இந்தியாவை சேர்ந்த பயணிகள் மட்டும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்,’ என்று தெரிவித்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,சர்வதேச விமான போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்திருந்தது.அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு,கடந்த மார்ச் 27 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன.இந்நிலையில்,சீனாவிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback