1 முதல் 5-ம் வகுப்புக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை? – பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை
தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழகத்தில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
கோடை வெயில் அதிகமாக இருப்பதால் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெற்றோரிடம் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைkகப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறதாம். இது குறித்து முதல்வருடனும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
Tags: தமிழக செய்திகள்