இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டேக்ஸி அறிமுகம் எங்கன்னு தெரியுமா???
இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டாக்சி சேவை மும்பை நகரில் இயக்கப்படவிருக்கிறது. இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
மும்பை போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையிலும், புதிய போக்குவரத்து வசதியை அறிமுகம் செய்வதற்காகவும் மும்பையில், அதிநவவீன வாட்டர் டாக்சி சேவை கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதிவேகம் கொண்ட வாட்டர் டாக்சியில், ஏசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து நேரங்களிலும் இந்த வாட்டர் டாக்சி இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வாட்டர் டாக்சி சேவையை மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையே இயக்கப்படவுள்ளது. மும்பையிலிருந்து நவி மும்பை 30 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த வாட்டர் டாக்சி சேவைக்கு குறைந்தபட்சம் 200 முதல் அதிகபட்சம் 700 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ரயில், பேருந்து போல மாதாந்திர பயண அட்டைகளும் வாங்கிகொள்ளலாம்
Tags: இந்திய செய்திகள்