Breaking News

அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளி பயணிகளை உபசரிப்புடனும், அன்புடனும் நடத்த வேண்டும்- போக்குவரத்துக் கழகம்

அட்மின் மீடியா
0
அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள்  கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 


அதில் மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் அவர்களை சரியாக கண்காணித்து ஓட்டுநருக்கு சமிக்கை செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணிகளை உபசரிப்புனும், அன்புடன் நடத்த வேண்டும். 

மாற்றுத்திறனாளி பயணிகளிடம் கோபமாகவோ அல்லது ஏளனமாகவோ அல்லது இழிவாகவோ எந்த காரணத்தை முன்னிட்டும் பேசக்கூடாது.

பேருந்தில் இடம் இல்லை என மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் இருந்து இறக்கி விடக்கூடாது.

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாநிலம் முழுவதும் 75 சதவீத கட்டணச் சலுகையில் பயணம் செய்ய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அனுமதிக்கவேண்டும்.

மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டுமென தமிழக அரசின் போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback