Breaking News

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த ஹைகோர்ட் பரிந்துரை!

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 10, 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் வழக்கு தொடர்ந்திருந்தார் .சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 



இந்த மனுவை விசாரனை செய்த நீதிபதிகள் 3-வது அலை அதிகரித்து வரும் நிலையில் 10, 11, 12-ம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த வேண்டும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்“ என்று தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கினர்.

அதன் பின்பு பின்னர் மனுதாரர் தரப்பிடம், “அரசின் கொள்கை முடிவை மீறி பள்ளிகளை மூடும்படி நாங்கள் உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அபராதத்துடன் வழக்கைத் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தனர். இதனையடுத்து மனுதாரர் தரப்பில், வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறியதைத் தொடர்ந்து வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback