Breaking News

மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்திலிருந்து இறக்கி விட்ட விவகாரம், முதல்வர் கண்டனம்…!

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் மீன் விற்கும் பெண் ஒருவர் இறக்கிவிடப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தவறிழைத்த பேருந்தின் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் நேரக் காப்பாளர் ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடியைச் சேர்ந்தவர் சேர்ந்த செல்வமேரி என்ற பெண் மீன் விற்பனை செய்து வரும் இவர் சம்பவ தினத்தன்று குளச்சல் சென்று மீன் விற்பனை செய்து விட்டு இரவு மீண்டும் வாணியக்குடி செல்வதற்காக குளச்சல் பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறினார். அப்போது மீன் விற்றதால் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன் ஆகியோர் மூதாட்டி செல்வத்தை பேருந்தில் ஏற்றாமல் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து மூதாட்டி செல்வம் அங்கே இருந்த நேரக் காப்பாளர் ஜெயக்குமாரிடம் சென்று புகார் செய்தார். ஆனால் அவரும் அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, மூதாட்டி செல்வத்தை பேருந்தில் ஏற்றாமல் இறக்கிவிட்ட ஓட்டுநர் மைக்கேல் நடத்துனர் மணிகண்டன் மற்றும் நடவடிக்கை எடுக்காத நேர குறிப்பாளர் ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அரவிந்த் உத்தரவிட்டார்

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/divakarMathew/status/1468127762950934530

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback