இன்று உருவாகிறது வங்கக் கடலில்புதிய காற்றத்தழுத்த தாழ்வு பகுதி - எந்த மாவட்டங்களில் கனமழை? முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று மாறும் என்றும் இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,
24.11.2021 ம் தேதி:-
திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென்
மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட
மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்
லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
25.11.2021 ம் தேதி:-
காஞ்சிபுரம்,
செங்கப்பட்டு. திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, ராமநாதபுரம்,
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி' மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை,
காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான
மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்
பெய்யக்கூடும்.
26.11.2021 27.11.2021 ம் தேதி:-
சென்னை,
திருவள்ளூர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக இடங்களில் இனி
மின்னலுடன் கூடிய கன =முதல் மிக கன மழையும் விழுப்புரம், திருவண்ணாமலை,
ராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா
மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்
கூடிய கன மழையும், ஏனைய மாவட்டஙாள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக
இடங்களில் இடி மின்னலுடன். கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை
அடுத்த
24 மணி நேரத்திற்கு வாணம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு
சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
Tags: தமிழக செய்திகள்