அக்.15 முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து வரும் 15ம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா அளிக்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது கொரானா தொற்றின் பாதிப்புகள் குறைந்து மீண்டும் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் வெளிநாடுகளிலிருந்து தனி விமானங்களில் இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அக்.15 முதல் புதிய விசா வழங்கப்படும்.
அடுத்தகட்டமாக, நவம்பர் 15ம் தேதி முதல் பிற விமானங்களிலிருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா அனுமதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்