ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் : தென்னாப்பிரிக்கா பெண் உலக சாதனை
அட்மின் மீடியா
0
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் Teboho Tsotetsi மற்றும் Gosiame Sithole என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே ஆறு வயதில் இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில், Sithole (37) மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 7-ம் தேதி இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
Source:
Tags: வெளிநாட்டு செய்திகள்