Breaking News

FACT CHECK: கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அடித்து சித்தரவதை செய்து கொலை செய்ததாக பரவும் தவறான வீடியோக்கள்: உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஒரு பெண் பேசும் வீடியோவை ஷேர் செய்கின்றார்கள் அதில் அந்த பெண் தினமும் 7 பேர் கொல்லபடுகின்றார்கள், அவர்கள் மரணம் அடையவில்லை, எனது தந்தையை இங்கு மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் அவருக்கு சரியான சிகிச்சை மற்றும் மாத்திரை அளிக்காமல் அவரை கொன்று விட்டனர் ” எனக் கூறுகின்றார்

மேலும் அதை தொடர்ந்து அந்த வீடியோவில் ஒருவர் படுக்கையில் இருக்கும் நோயாளியை கழுத்தை நெரிப்பது போன்றும், 

அடுத்து மற்றுமொறு காட்சியில் மருத்துவர்கள் நோயாளியை அடிப்பது போன்றும் வீடியோ காட்சியும் உள்ளது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளவை அனைத்தும் ஒரே சம்பவ வீடியோக்கள் இல்லை, அவை 3 வெவ்வேறு சம்பவங்கள் ஆகும்

அந்த வீடியோவை யாரோ எடிட் செய்து வேண்டும் என்றே பொய்யாக பரப்பவிட்டுள்ளார்கள்


முதல் வீடியோ 

அந்த பெண் பேசும் வீடியோ கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பெங்களூருவின் ஆக்ஸ்போர்ட் மருத்துவமனையில் நடந்தது ஆகும்

அந்த பெண் பெயர் அகிலா ஆகும் அவருடைய தந்தைக்கு மருத்துவமனை நிர்வாகம் சரியான மருத்துவம் செய்யாமல் கொன்றுவிட்டது என குற்றம்சாட்டி உள்ளதை வீடியோவில் காணலாம். கீழ் உள்ள வீடியோவில் காணலாம்


இரண்டாம் வீடியோ 

பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் ஒரு நபரை அங்கு உள்ள ஊழியர்கள் கடுமையாக தாக்கும் அந்த வீடியோ சம்பவம் கடந்த 22-08-2020 அன்று நடந்துள்ளது. பின்னர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட Gurdeep Singh and Mohammed Rahul ஆகிய 2 நபர்கள்  காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். 

மூன்றாம்  வீடியோ 

முதியவர் ஒருவரை படுக்கையில் கழுத்தை நெரித்துக் கொல்வதுபோன்று காட்டப்பட்டு இருக்கும் வீடியோ காட்சியானது பங்களாதேஷில் நடந்தது

தீர்வு 

மேலே உள்ள 3 சம்பவ வீடியோக்களை ஒன்றாக எடிட் செய்து உண்மை போல் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


முதல் வீடியோ 
அட்மின் மீடியாவின் ஆதாரம்


 


இரண்டாம் வீடியோ 
அட்மின் மீடியாவின் ஆதாரம்



மூன்றாம் வீடியோ

அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.youtube.com/watch?v=PUjBkXHbNQk

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this