Breaking News

மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்தை ஆக்சிஜன் வாங்க நன்கொடையளித்த விவசாயி!

அட்மின் மீடியா
0

மத்திய பிரதேச மாநில விவசாயி ஒருவர், தனது மகளின் திருமண செலவுக்காக சேமித்த ரூ.2 லட்சம் பணத்தை, கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்காக நன்கொடையாக வழங்கி உள்ளார்.



அவரது பெயர், சம்பாலால் குர்ஜார்.நீமுச் மாவட்டம் குவால் தேவியன் கிராமத்தில் வசிக்கும் அவர், தனது செல்ல மகள் அனிதாவின் திருமணத்துக்காக பல ஆண்டுகளாக பணத்தை சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார். 

வெகு விமரிசையாக மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்பது அவரின் விருப்பம். இந்நிலையில் திடீரென நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியது.குறிப்பாக, அவர் வசிக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் தொற்று கடுமையாக பரவத் தொடங்கியது. 

இந்த சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கோவில் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், திருமணத்துக்கு குறிப்பிட்ட அளவு நபர்களை மட்டுமே வைத்து நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மிகவும் எளிமையாக் அவரது மகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது

திருமணத்துக்காக மீதமிருந்த தொகையை கொரோனா காலத்தில் அல்லல்பட்டு வரும் மக்களுக்காக செலவிட முடிவெடுத்தார்.அதற்காக தனது மாவட்ட ஆட்சியரை சந்தித்த சம்பாலால் குர்லஜார், 

மாவட்ட கலெக்டர் மயங்க் அகர்வாலிடம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அதில் தனது தாலுகா மருத்துவமனைக்கும் மற்றும் மாவட்ட மருத்துவமனைக்கும் தலா ஒரு மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக்கொள்ள கேட்டுக்கொண்டார். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback