Breaking News

38வது மாவட்டமாக நாளை உதயமாகிறது மயிலாடுதுறை மாவட்டம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாளை (28/12/2020) உதயமாகிறது. 



நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (28/12/2020) காலை 09.30 மணிக்கு காணொளி மூலம் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback