Breaking News

லஷ்மி விலாஸ் வங்கியை, டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்.!

அட்மின் மீடியா
0

தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கி கடந்த 3 ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. லஷ்மி விலாஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில்,சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.



இதையடுத்து, வங்கி இணைப்பதற்கான ஒரு பகுதியாக, லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. 


அதன்படி, 17.11.2020 முதல் 16.12.2020 வரை அதன் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்கவோ, பரிமாற்றம் மேற்கொள்ளவோ முடியாது என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback