Breaking News

நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்கிறது.. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அட்மின் மீடியா
0

நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

   

நாசாவின் பறக்கும் ஆய்வகமான சோஃபியா நிலவில் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. சோபியா டெலஸ்கோப் மூலம் மேற்கொண்ட ஆய்வில் நிலவின் சூர்ய ஒளி மேற்பரப்பில் நீர் இருப்பதை கண்டறிந்துள்ளனர். 

 

அதாவது நாம் பூமியிலிருந்து பார்த்தால் நிலவில் தெரியும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான கிளாவியஸ் பள்ளத்தில் நீரின் மூலக்கூறுகளை சோஃபியா கண்டறிந்துள்ளது

 

இதன் காரணமாக நிலவின் பூமியை நோக்கிய பகுதிகளில் அடுத்த கட்ட ஆய்வுகளை நடத்தவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

 

More :

https://nasa.tumblr.com/post/633065706519494656/we-just-found-water-on-the-moons-sunlit-surface?linkId=102931499

 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback