Breaking News

பக்தர்கள் தொடாமலேயே சென்சார் மூலம் இயங்கும் கோயில் மணி: முஸ்லீம் நபரின் வித்தியாச முயற்சி!

அட்மின் மீடியா
0
மத்தியபிரதேசத்தில் பக்தர்கள் தொடாமலேயே சென்சார் மூலம் இயங்கும் கோயில் மணியை இஸ்லாமியர் ஒருவர் வடிவமைத்து கொடுத்துள்ளார்.


மத்திய பிரதேசத்தில் உள்ள மாண்டசூர் பகுதியில் வசிக்கும் இந்த கோவில் மணியை வடிவமைத்த 62 வயதான நாரு கான்  கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் இன்னும் கொரானா பயத்தால் உள்ளார்கள் அவர்களுடைய அச்சத்தை போக்க இந்த கோவில் மணியினை சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைத்தேன். ரூ.6,000 செலவில் உருவாக்கப்பட்ட இந்த மணியை எங்கள் பகுதியில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்கு அளித்தேன்


கோவில் நிர்வாகிகளும் இதனை ஏற்று கொண்டு அதனை கோவிலில் வைக்க ஒப்புகொண்டார்கள்

இதன் மூலம் பக்தர்கள் மணியை தொட தேவையில்லை. அந்த சென்சார் அருகே கைகளை கொண்டு சென்றாலே மணி தானாக அடிக்கும்.

மேலும் இந்த கோவில் மணி மூலம்  கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது மட்டுமல்லாமல், பக்தர்களுக்கு தங்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும் வகையில் கடவுளை வணங்கவும் முடியும் என கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

அந்த கோவில் மணியின் வீடியோவை பார்க்க:



Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Share this