Breaking News

யுவன் சங்கர் ராஜாவை ஏன் முஸ்லீமாக மாற்றினீர்கள் ? யுவனின் மனைவி ஷப்ருன் நிஷா அதிரடி பதில்

அட்மின் மீடியா
0
பிரபல சினிமா இசை அமைப்பாளர் இளையராஜா அவர்களின் மகன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் இஸ்லாமிய மதம் மாறிவிட்டதாக வும் தனது பெயர் அப்துல் காலிக் எனவும் அறிவித்தார்



அதன் பின்பு அவர் ஆடை வடிவமைப்பாளராக உள்ள  ஷப்ரூன் நிஷா என்பவரை யுவன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது


இந்நிலையில் நேற்று (மே 27) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளிக்கத் தொடங்கினார் யுவனை இப்படி முஸ்லிமாக மாற்றி வீட்டீர்களே?” என்று கேட்ட கேள்விக்கு

நான் அவரை மதம் மாற்றவில்லை அவர் இஸ்லாம் மீது பற்று கொண்டு குர்ஆனை கற்றுத் தெரிந்து எங்கள் திருமணத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார். எங்கள் திருமணம் குறித்த பேச்சு நடைபெறும் வரை அவரை நான் சந்தித்தது இல்லை. எங்கள் திருமணம் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்.


மேலும் இளையராஜா போன்ற இந்து பக்தியாளரின் மகன் இப்படி இஸ்லாத்தை ஏற்க எப்படி அனுமதித்தீர்கள்? அவர் மனதில் விஷத்தை கல்ந்து விட்டீர்களே?” என்று  கேட்டதற்கு,

எப்பேற்பட்ட முட்டாள்தனத்தில் உள்ளீர்கள்? விஷம் கலப்பது என்றால் என்ன? சொல்லுங்கள், இதுபோன்ற கேள்விகள் அதிர்ச்சியாக உள்ளது. இப்போதே யுவனிடம் நேரடி கேள்வியாக ‘ஏன் இஸ்லாத்தை ஏற்றீர்கள்?’ என்று நான் கேட்கிறேன், அவரின் பதிலை சந்திக்க தயாரா?” என்பதாக அதிரடியாக பதிலளித்துள்ளார் ஷப்ருன் நிஷா.


இந்தக் கேள்வி பதில்கள் அனைத்துமே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில் யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா பகிர்ந்திருக்கிறார்

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback