Breaking News

மத்திய அரசின் இலவச சிலிண்டர் வாங்குவது எப்படி?முழு விவரம்...

அட்மின் மீடியா
0
பொதுவாக கிராமப் பகுதிகளிலும் வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களிலும் வசிக்கும் பலர் சமைப்பதற்கு சுத்தப்படுத்தப்படாத மண்ணெண்ணெய். மரக்கட்டை, மற்றும் மாட்டுச்சாண வறட்டி உள்ளிட்டவற்றை சமையல் அடுப்பில் பயன்படுத்தி வந்தனர் .



அனைவருக்கும் சிலிண்டர் என்கின்ற திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் கடந்த 2016 மாண்டு துவக்கி வைத்தார் அந்த திட்டத்தின் பெயர் தான் உஜ்வாலா யோஜனா திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் வருமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலின, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், வனவாசிகள், தீவுகள்) சேர்ந்த சுமார் 5 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது இலக்காக நிர்ணயக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் பயன்கள்

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினர் இணைப்பிற்கு ரூ.1600 நிதி உதவி வழங்கப்படும்.  நிர்வாகச் செலவிற்காக இத்தொகையில் எரிவாயு உருளை, ரெகுலேட்டர், எரிவாயுக் குழாய் ஆகியவற்றை வழங்குவதும்  இதில் அடங்கும்.


இந்த திட்டத்தில் பங்குபெற்று பயன்பெற தகுதிகள்



  • வறுமைக் கோட்டிற்கு (BPL) கீழ் உள்ளவர்களாக இருக்கவேண்டும்
  • பயனாளி பெண் அங்கத்தினராக இருத்தல் வேண்டும்.
  • அக்குடும்பத்தில் உள்ள மற்ற  நபர் யாரும் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கக் கூடாது.
  • குடும்ப அட்டையில் பயனாளியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • பயனாளி நிரந்தரமாக அதே இருப்பிடத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • பயனாளியின் வீட்டு சமையல் அறையில் மேடை இருத்தல் வேண்டும். அல்லது மேடை அமைக்க முன் வரவேண்டும்.
  • 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்

எங்கு விண்ணப்பிப்பது எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கான விண்ணப்பப்படிவம் உங்கள் பகுதியில் உள்ள சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் கிடைக்கும்.  

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் 

  • குடும்ப அட்டை
  • ஜன்தன் வங்கிக் கணக்கு, 
  • ஆதார் எண் 

ஆகிய நகல்களை இணைக்க வேண்டும்


மேலும் தகவல்களுக்கு 


கட்டணமில்லா தொலைபேசி எண் 1800233555 அல்லது 1966 


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback