Breaking News

காலையில் இந்துவாக இருந்தவர் மாலையில் முஸ்லீமாக கட்டாய மதம் மாற்றபட்டாரா? செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலரும்  
சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் அரசுத்துறை அதிகாரியாக இருந்த இந்து ஒருவரை ஊழல் குற்றம் சுமத்தி ஒரு விடுதிக்கு வரச்செய்து ஒரு பெண்ணோடு இருந்ததாக குற்றம் சுமத்தி சிறைக்கு செல்கிறாயா அல்லது மதம் மாறுகிறாயா என்று மிரட்டி கண்ணீருடன் கதறக் கதற இஸ்லாமியராக  மதம் மாற்றப்பட்டார் அவர் மதமாற்ற உறுதிமொழி வாசிக்கும் போது அவரது கைகள் நடுங்குவதை பாருங்கள் காலையில் இந்துவாக வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பும் போது முகமது ரபீக் என்ற பெயரில் வந்தால் குடும்பத்தினர் என்ன வேதனைப் பட்டிருப்பார்கள் இதேபோல் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு நடக்கலாம் 

என ஒரு செய்தியினையும் அதனுடன் ஒரு வீடியோ அந்த வீடியோவில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்கின்றார் அந்த வீடியோவையும்  ஷேர் செய்து வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா  களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்                    

அப்படியானால் உண்மை என்ன

அந்த வீடியோ சம்பவம் நடந்தது மலேசியா ஆகும்

அந்த சம்பவம் நடந்தது  04.05.2018 ஆகும்

அந்த வீடியோவில் உள்ளவர்  மலேசியாவில் உள்ள  புத்ராஜெயாவில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். 

அந்த வீடியோ அந்த காலகட்டத்திலும் விமர்சனத்திற்க்கு உள்ளானது

அந்த வீடியோ குறித்து அந்த பள்ளி இமாம் அவர்கள் அளித்த் விளக்கம்

யாரோ வேண்டும் என்றே பொய்யான செய்தியினை சமூக ஊடகங்களில் பலரும் பொய்யான செய்தியினை பரப்புகின்றார்கள்

உண்மையில் அவர் கடந்த  30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய நம்பிக்கையும் இஸ்லாமிய மார்க்கத்தையும் தெரிந்து வந்துள்ளார் எனவும் யாரும் அவரை கட்டாயபடுத்தவில்லை எனவும் கூறினார்

மேலும் இஸ்லாத்திற்க்கு மாறிய மொஹமத் ரபிக் அவர்கள்  கூறும் போது இஸ்லாம் ஒருபோதும் மற்றவர்கள் மதத்தை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தவில்லை. மதத்தின் தேர்வு உட்பட மற்றவர்களின் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் நாம் மதிக்க வேண்டும், ”என்று அவர்  கூறினார். 


அட்மின் மீடியா ஆதாரம் 1 


 https://www.thestar.com.my/news/nation/2018/04/30/man-was-not-forced-to-embrace-islam-says-head-imam/?fbclid=IwAR1bu5MU242MUKa8qii2q78cGR2f_ROTzL-nE7o73KWzrPcCGQIIlMUIF6Y


அட்மின் மீடியா ஆதாரம் 2


https://www.facebook.com/watch/?v=1347393628738018


அட்மின் மீடியா ஆதாரம் 3
 
https://themalaysianews.com/man-was-not-forced-to-embrace-islam-says-head-imam-nation/


 எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback