Breaking News

ஜூன் 29ல் தீபாவளி ரயில் முன்பதிவு

அட்மின் மீடியா
0
தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் சனிக்கிழமை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியைக் கொண்டாட சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு  செல்வது வழக்கம்.
 
இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள், ஜூன் 29ம் தேதி முதல் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
 
பொதுவாக ரயில் டிக்கெட் முன் பதிவு செய்ய விரும்புவோர், 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய முடியும். 
 
அதன்படி, அக்டோபர் 27ம் தேதி ரயிலில் செல்ல ஜூன் 29ம் தேதியும், அக்டோபர் 26ம் தேதி பயணிக்க ஜூன் 30ம் தேதியும், அக்டோபர் 25ம் தேதி பயணம் செய்ய ஜூலை ஒன்றாம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Share this