Breaking News

திமுக தேர்தல் அறிக்கை முழு விபரம் DMK Manifesto 2026 PDF DOWNLOAD

அட்மின் மீடியா
0

 திமுக தேர்தல் அறிக்கை முழு விபரம் DMK Manifesto 2026

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். மொத்தம் 525 வாக்குறுதிகளைக் கொண்ட இந்த விரிவான அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அவர், இது வெறும் வாக்குறுதிகள் அல்ல, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் லட்சிய ஆவணம் என்று குறிப்பிட்டார்


திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் - 28, மதிமுக-4, மமக - 2, கொமதேக -2, ஐயூஎம்எல் 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் 8, தேமுதிக 10 தொகுதிகளிலும் களம்காண்கின்றன. 

இந்த நிலையில் 164 பேர் அடங்கிய திமுக வேட்பாளர்களின் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். 

இதைத்தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார் .


திமுக தேர்தல் அறிக்கை

01. 1 முதல் 5 ம்வகுப்பு வரை படிக்கும் 19 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது. கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதல்வரின் காலை உணவு திட்டம் 8 வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

02. ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் பெற்று வரும் உரிமைத்தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும்

03. இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்த வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்கள் வழங்கப்படும்.

04. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்

05. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சம் ரூபாய் ஆகவும், காப்பீட்டு தொகை ரூ.10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்

06. உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின்படி மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் இனி 1,500 ரூபாய் ஆக உயர்த்தப்படும்

07. நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ,500 ரூபாய் ஆக.உயர்த்தி வழங்கப்படும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும்.08. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்.

09. முதியோர் உதவித்தொகை 1,200 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படும்.

10 .மீன்பிடி தடைகால சிறப்பு நிவாரண தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரண தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

11. அன்னை தமிழை போற்ற பன்னாட்டு தமிழறிஞர்களையும், மொழி வல்லுநர்களையும் செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும்.

12. மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் அறிக்கையை மாநிலம் முழுவதும் விவாத பொருளாக்கி மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து உரிமைகளையும் மேற்கொள்வோம்.

13. சுய உதவி குழுவில் இருக்கும் பெண்கள், தொழில் முனைவோராக முன்னேறும் வகையில் பிணை இன்றி 5 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் வங்கிக்கடன் வழங்கப்படும்.

14. பேரிடர் கால இழப்பீடுகளாக இறவை பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்கள் ஹெக்டேர் ஒன்று ரூ.25 ஆயிரம் ஆகவும் நீண்ட கால பயிர்களுக்கு ரூ.27 ஆயிரம் ரூபாய் ஆகவும், மானாவாரிப் பயிர்களுக்கு ரூ.12 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.

15. மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.

16. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

17. மத்திய அரசு எட்டாவது ஊதியக்குழு செயல்படுத்தியதும், அதனை மாநில அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கும் செயல்படுத்த குழு அமைக்கப்படும்.

18. அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 லட்சம் காலிப்பணியிடங்கள் கால தாமதமின்றி நிரப்பப்படும்.

19.அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை

20. உயர்கல்வி படிக்கும் 35 லட்சம் மாணவர்களுக்கு 5 ஆண்டுக்குள் லேப்டாப் வழங்கப்படும்.

21. உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1,500 மாத உதவித்தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.

22. புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 2030ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள், நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.

23. 18 லட்சம் கோடி அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

24. தமிழகத்தின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலர் ஆக உயர்ந்து உலக வணிக வரைபடத்தில் தமிழகம் இடம் பெறும் வகையில் திராவிட மாடல் 2.0 அரசு அமையும்

25. தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடியில் இருந்து 5 லட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும்

26. 5 ஆயிரம் கோயில்களுக்கு கும்பாபிஷேகம். ஆயிரம் கிராம தெய்வக் கோவில்கள் மறு சீரமைப்பு

27. சிறுபான்மையினர் தொழில் துவங்க டாம்கோ மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு 30 லட்சம் ரூபாயாக வழங்கப்படும்.

28. அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள்.

29. மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீட்டு வசதி, வாழ்வாதாரம், திறன்மேம்பாடு, வங்கிக்கடன் கிடைக்க பல்வேறு உதவி கிடைக்க தாயுமானவர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை

30. கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கிமீ. நீளமுள்ள சாலைகள் ரூ. 10 ஆயிரம் கோடியில் சீர் செய்யப்படும்.

31.முக்கிய மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளில் 50 செம்மொழிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

32. திருச்சி ,மதுரை, கோவை, சேலம் மாநகராட்சிகளின் அருகில் உலகத் தரத்தில் புதிய நகரங்கள் அமைக்கப்படும்.

33. அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பஸ்கள் இயக்கப்படும்.

34. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்.

35. மொழிப் போராட்ட வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிய, நவீன நூலக வசதிகளுடன் பொள்ளாச்சியில் காட்சிக்கூடம் அமைக்கப்படும்.

36. நகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.

37.தொழிற்சாலை அதிகமுள்ள நகரங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதை எளிதாக்கும் பொருட்டு குழந்தைகள் காப்பகம் ஆயிரம் உருவாக்கப்படும்

38. பல்வேறு சிறப்பாக பணியாற்றிடும் திருநர், திருநங்கைகளுக்கு விருது.

39. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் இல்லா நிலை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

40. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறபடுத்தப்பட்டோர், சீர்மரபினர் தொழில் துவங்க TABCEDCO வாயிலாக கடன் பெறும் உச்சவரம்பு 30 லட்சம் ரூபாயாகஉயர்த்தப்படும்.

41.கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபும், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

42. பத்திரிகையாளர்களின் குழந்தைகள் கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் அனைத்தும் இரு மடங்காக உயர்த்தப்படும்.

43. தமிழகத்தில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.

44. தமிழகத்தின் எம்எஸ்எம்இ நிறுவனப் பொருட்கள் உலகளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் வணிகத் தளம் உருவாக்கப்படும்.

45. கிராமப்புறங்களின் ஆதாரங்களைக் கொண்டு ஊரகப்பகுதிகளில் 5 ஆயிரம் புத்தொழில்கள் துவங்கப்படும்.

46. கூடைபந்து , கைப்பந்து, பாட்மின்டன், தற்காப்பு கலை, வாள்வீச்சு விளையாட்டுகளக்கான பல்நோக்கு வசதி கொண்டு உள்விளையாட்டு அரங்குகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பது உறுதி செய்யப்படும்.

47. மீனவர்கள் தங்களின் வருவாயை பெருக்குவதற்குத் தேவையான நவீன உள்கட்டமைப்பு வசதிகள், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன்இறங்கு தளங்கள் ஏற்படுத்தி தரப்படும்.

48. அனைத்து அரசு கலைக்கல்லூரிகளிலும் வைபை வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள்

49. அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.

50. இல்லத்தரசி கூப்பன்: 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங்மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

தேர்தல் அறிக்கை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://drive.google.com/file/d/1NYPHMzv39nH7YNU5ZXTTw608Q_JfO75L/view?usp=sharing

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback