தமிழகத்தில் இனி வீடு கட்ட புதிய ரூல்ஸ்.அரசு அதிரடி உத்தரவு.!
தமிழகத்தில் இனி வீடு கட்ட புதிய ரூல்ஸ்.அரசு அதிரடி உத்தரவு.!தமிழகத்தில் பொது கட்டட விதிகளில் சில திருத்தங்கள் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் 3300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் இரண்டு கார் மற்றும் இரண்டு பை நிறுத்துமிடம் ஒதுக்குவதை கட்டாயமாகப்பட்டுள்ளது.அதனைப் போலவே அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்துவது அவசியம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதி, வீட்டின் உட்புறத்தில் அதிக இடத்தைப் பயன்படுத்த விரும்புவோருக்கு ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும், நகரங்களில் பார்க்கிங் பிரச்சனையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது. எனவே, புதிய வீடு கட்டுபவர்கள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதற்கு முன் அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான கட்டடங்கள் போன்றவைக்கு மட்டுமே வாகன நிறுத்துமிட விதிகள் கட்டாயமாக்கபட்டிருந்தது.
ஆனால், தனி வீடுகள் மற்றும் தனி மனைகளில் கட்டப்படும் வீடுகளுக்கும் புதிய விதிகள் வந்து விட்டன. இதன் மூலம் ஒவ்வொரு புதிய வீட்டிலும் வாகன நிறுத்துமிடம் அமைக்க விதிகள் வகுக்கப்பட்டு விட்டது.
போக்குவரத்து சாலையின் அளவு குறையும் போது மேலும் விபத்துகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் வீடு கட்டும் போது கட்டாயம் பார்க்கிங் வசதி மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்