10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி செயலாளர் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர் அணியிட்டதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அந்தந்த மாவட்ட அளவில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தகுதிகள், வயது வரம்பு ஆகியவற்றுடன் கூடிய அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்ட இணையதளம் வழியாக மட்டுமே 10.10.2025 முதல் 09.11.2025 வரை விண்ணப்பிக்க வேண்டும்.கடிதங்கள் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பணி : ஊராட்சி செயலாளர் panchayat secretary
கல்விதகுதி : (8th வரை தமிழ்வழி கல்வி) 10th தேர்ச்சி
வயதுவரம்பு : 18 முதல் 37 வரை முன்னுரிமை உள்ளவர்களுக்கு அரசு விதிகள் படி வயது வரம்பு சலுகை உண்டு.
விண்ணப்பிக்கும் வலைத்தளம் : www.tnrd.tn.gov.in
விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.11.2025
நவம்பர் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். பிறகு டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்துவர்.
இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். தொடர்ந்து 17 ஆம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெகட்டர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளுக்கு இயக்க ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
1. விண்ணப்பதாரர்கள் இணையவழி ஆட்சேர்ப்பு படிவத்தை நிரப்புவதற்கு முன், விண்ணப்பிக்கும் மாவட்டங்களால் வழங்கப்படும் விரிவான விளம்பரத்தைப் படிக்க வேண்டும். விரிவான விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தேவையான தகுதிகள் உங்களிடம் இருப்பதாக நீங்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே இணையவழி விண்ணப்பத்தை நிரப்ப தொடரவும். இல்லையெனில், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம்(கள்) நிராகரிக்கப்படும்.
2. ஒருமுறை செலுத்தப்பட்ட கட்டணம் எந்த சூழ்நிலையிலும் திரும்பப் பெறப்படாது அல்லது வேறு எந்த தேர்வுக்கும் கட்டணத்தை இருப்பு வைக்க முடியாது.
3. அனைத்து விண்ணப்பதாரர்களின் தகுதியினை தீர்மானிப்பதற்கான தேதி, இணையவழி ஆட்சேர்ப்பு படிவத்தை சமர்ப்பிப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட இறுதித் தேதியாக இருக்கும்.
4. தவறான தகவல்களைச் சமர்ப்பிப்பது நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்கள் அனைத்து விவரங்களையும் இணையவழி ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தில் கவனமாக நிரப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.
5. விண்ணப்பதாரர்கள் ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பதவிக்கு ஒரே ஒரு இணைய ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
6. பரிந்துரைக்கப்பட்ட அத்தியாவசிய தகுதிகள் குறைந்தபட்ச தகுதியாகும். குறைந்தப்பட்ச தகுதிகள் இல்லாத விண்ணப்பதாரர்கள் ஆட்சேர்ப்பு தேர்வு / நேர்காணலுக்கு அழைக்க தகுதி அற்றவர்கள் ஆவார்.
7. விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிக்கைகளும் விண்ணப்பதாரர்கள் அறிவுக்கு உட்பட்டு உண்மையாகவும் முழுமையாகவும் இருக்கும் என்பதை விண்ணப்பத்தாரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏதேனும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதை விண்ணப்பத்தாரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலே உள்ள வழிமுறைகளை நான் கவனமாகப் படித்துப் புரிந்துகொண்டேன் என்றும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் இதன் மூலம் அறிவேன். விரிவான விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளை (கல்வி, அனுபவம் போன்றவை) நான் பூர்த்தி செய்கிறேன் என்றும் அறிவேன்.
Tags: வேலைவாய்ப்பு