Breaking News

தீபாவளி ஸ்பெஷல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முழு பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

 தீபாவளி ஸ்பெஷல் சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!





தீபாவளி பண்டிகையின்போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பின்வரும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

செங்கல்பட்டு – திருநெல்வேலி 

ரயில் எண்: 06156 திருநெல்வேலி – செங்கல்பட்டு சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் அக்டோபர் 21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் அதிகாலை 04.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் 

மறுமார்க்கத்தில் ரெயில் எண்: 06155 செங்கல்பட்டு – திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் அக்டோபர் 21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் .

எழும்பூர் - கோவை 

போத்தனூரில் இருந்து அக்.19-ம் தேதி இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரயில் (06044) புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தடையும். சென்ட்ரலில் இருந்து அக்.20-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு சிறப்பு ரயில் (06001) புறப்பட்டு, போத்தனூர் வழியாக மறுநாள் காலை 8 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை சென்றடையும்.

மங்களூரு சென்ட்ரலில் இருந்து அக்.21-ம் தேதி மாலை 4.35 மணிக்கு சிறப்பு ரயில் (06002) புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். சென்ட்ரலில் இருந்து அக்.22-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு சிறப்பு ரயில் (06043) புறப்பட்டு, அதேநாள் இரவு 10 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

திருச்சி – தாம்பரம்  சிறப்பு ரயில் 

திருச்சி – தாம்பரம் இடையே ஒரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்கள்: 06190 / 06191) இயக்கப்பட உள்ளது. 

இந்த ரயில் சேவை தீபாவளி பண்டிகை காலத்தில் கூடும் பயணிகள் எண்ணிக்கையை சமாளிக்க உதவும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.ரயில் டிக்கெட்மேலும், இந்த சிறப்பு ரயில் நாளை (புதன்கிழமை) முதல் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடத்துக்கு தற்காலிக நிறுத்தம் பெறும் என்று தெற்கு ரெயில்வே தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் -மதுரை 

சென்னை எழும்பூர் -மதுரை இடையே அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், சென்னை எழும்பூரில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு மதுரையை வந்தடையும்.

அதேபோல் மறு மார்க்கத்தில் மதுரை மற்றும் தாம்பரம் இடையே, அக்டோபர் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சிறப்பு ரயில் மதுரையில் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு சென்னை சென்றடையும்.

இந்த ரயில்கள் விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக்குச் செல்லும். 12 மெமு பெட்டிகளுடன் இயக்கப்படும்.

தாம்பரம் - செங்கோட்டை

அக்டோபர் 17 ஆம் தேதி தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கும், அக்டோபர் 20 ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கும் முன்பதிவு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும். 

இந்த சிறப்பு விரைவு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி வழியாகச் செல்லும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback