Breaking News

RTE மாணவர் சேர்க்கை - தனியார் பள்ளியில் உங்கள் குழந்தைகள் 8 ம் வகுப்பு வரை இலவசமாக படிக்க விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

ஒன்றிய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு


தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) -இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

W.P. No. 18427 of 2025 - V. Eswaran vs. Government of Tamil Nadu & Others வழக்கில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) திட்டத்திலிருந்து பிரித்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அல்லது PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு (SLP) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.

RTE விண்ணப்பிப்பது எப்படி?

தற்போது இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாது. பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. RTE-க்காக காத்திருந்தவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

தேவையான ஆவணம்:-

1. பிறப்புச் சான்றிதழ்.

2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்.

3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்.

4. நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ்.

5. இருப்பிடச்சான்று,

மேலும், முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர்/ வட்டாரக் கல்வி அலுவலர்/ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 10-ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை கணக்கிட்டு அதன் விவரங்களை எமிஸ் தளம் மற்றும் பள்ளியின் முகப்பு வாயிலில் பலகையாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்க வேண்டும்.விண்ணப்ப பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், வட்டார கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலங்களில் பதிவேற்றம் செய்ய தேவையான ஸ்கேனர் வசதி ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .

நேரடியாக விண்ணப்பிக்கும் பெற்றோர்களுக்கு பள்ளி ஒப்புகை சீட்டை வழங்க வேண்டும்.

tamilnadu rte school admission

TN RTE Admission 2024

RTE Tamilnadu Admission 2024 Online Registration

RTE Tamil Nadu Admission 2024-25 Apply Online

rte tamilnadu

rte tamilnadu admission 2024-25

rte tnschools

rte tnschools gov in online application 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback