Breaking News

புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி - கைது செய்து சிறையில் அடைத்த நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி - கைது செய்து சிறையில் அடைத்த நீதிமன்றம்



காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி சங்கர் கணேஷ் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் கைது செய்யப்பட்டார். 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பூச்சிவாக்கம் பேக்கரியில் நடந்த அடிதடி சம்பவத்தில் சிமெண்ட் முருகன் கொடுத்த புகார் மீது ஒரு மாதமாக நடவடிக்கை எடுக்கவில்லை 

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால், இது எஸ்.சி., எஸ்.டி. (அடக்குமுறை தடுப்பு) சட்டத்தின் கீழ் மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டது.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் போது சான்றுகள், சாட்சியங்கள், மற்றும் புகார் தரப்பின் வாதங்களை கேட்ட பிறகு, காஞ்சிபுரம் நீதிமன்ற நீதிபதி செம்மல், "புகார் அளித்தவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரி பொறுப்புடன் நடந்து கொள்ளாமல் இருந்துள்ளார்" எனக் கடுமையாக கருத்து தெரிவித்தார்.

காஞ்சிபுரம் நீதிமன்றம்அதனைத் தொடர்ந்து, டிஎஸ்பி சங்கர் கணேஷை நீதிபதி நேரடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டார். வரும் 22-ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில், சீருடையில் இருந்த டிஎஸ்பி சங்கர் கணேஷை போலீசார் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்தனர்.இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback