Breaking News

அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல் பொது இடங்களில் முகக் கவசம் அணிய தமிழக சுகாதார துறை அறிவுறுத்தல்

அட்மின் மீடியா
0


தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. 



இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், 

முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்பவர்கள் கவனமாக இருக்கவும், கட்டாயம் முகக் கவசம் அணியவும் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback