Breaking News

டெல்லியில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

டெல்லியில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு

மன அமைதிக்காக ஹரித்வார் செல்வதாகச் சொல்லிவிட்டு டெல்லி சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். 

இதற்கு அடுத்த நாளே, அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் உட்பட செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார்.

செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் சுமார் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மேலும், செங்கோட்டையனுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.



இந்நிலையில், திடீர் பயணமாக கோவை விமானநிலையத்தில் இருந்து செங்கோட்டையன் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டார். 

ஆனால் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்ல இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். முதலில் ஹரித்வாருக்கு மன அமைதிக்காக செல்வதாகவும், டெல்லியில் யாரையும் சந்திக்கவில்லை எனவும் செங்கோட்டையன் சொல்லியிருந்த நிலையில், தற்போது அவர் அமித்ஷாவுடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback