Breaking News

பைக்கில் செல்லும் போது சாலையில் தீடீரென குறுக்கே சென்ற தெரு நாய் - விபத்தில் 4 வயது குழந்தை பலி

அட்மின் மீடியா
0

பைக்கில் செல்லும் போது சாலையில் தீடீரென குறுக்கே சென்ற தெரு நாய் - விபத்தில்ம் 4 வயது குழந்தை பலி

ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி உயிரிழப்பு.

படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிர் பிரிந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணி அருகே முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நெசவு தொழிலாளி கார்த்திக் தமிழ்ச்செல்வி தம்பதியருக்கு தங்கமித்ரா(6) அனாமிகா(4) 2மகள்கள் உள்ளனர். 

மேலும் இளைய மகள் அனாமிகாவுடன் தனது இருசக்கர வாகனத்தில் ஆரணி டவுன் கொசப்பாளையம் அரசமரம் அருகே சென்று கொண்டிருக்கும் போது திடிரென நாய் குறுக்கே வந்து வந்துள்ளது

இதில் எதிர்பாரதவிதமாக கார்த்தி மற்றும் குழந்தை அனாமிகா கீழே விழுந்தனர். அப்போது அனாமிகாவிற்கு தiயில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அனாமிகாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் திடிரென அனாமிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback