Breaking News

டிவிட்டர்,பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டா, யூடியூப் என அனைத்து சமூகவலைதளங்களுக்கும் தடை விதித்த நேபாள அரசு - போராட்டம் நடத்திய இளைஞர்கள் 16 பேர் உயிரிழப்பு

அட்மின் மீடியா
0

டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் என அனைத்து சமூகவலைதளங்களுக்கும் தடை விதித்த நேபாள அரசு - போராட்டம் நடத்திய இளைஞர்கள் 16 பேர் உயிரிழப்பு


நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள அரசு. அந்தக் கெடு முடிந்த நிலையில் 4-ம் தேதி அன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்குத் தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் என எக்ஸ், பேஸ்புக், யூடியூப் என 26 சமூக வலைதளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. 

நேபாள அரசின் சமூக வலைதள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் நாடாளுமன்ற வளாகம் அருகே ஜென் இசட் எனப்படும் 2003ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

அப்போது பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தினர், இதில் 16 பேர் பலியாகி இருப்பதாகவும். 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback