அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் இனி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் கிடையாது அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் இனி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் கிடையாது அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களைத் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஓய்வுபெறும் நாளில் பணி இடைநீக்க நடவடிக்கை கிடையாது எனத் தமிழ்நாடு அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. அதன்படி ஓய்வுபெறும் நாளில் இனி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குற்றச்சாட்டுகள்மீதான விசாரணை முடிந்த பிறகே பணப்பலன்களை பெற முடியும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்