Breaking News

திருவாரூரில் பயங்கரம் - வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்த தெருநாய் முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருவாரூரில் பயங்கரம் - தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கடித்த தெருநாய் முழு விவரம்



திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையைத் தெரு நாய் கடித்தது

அதில் குழந்தையின் தலை, கை, கால், காது உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. நாயிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற சென்ற பாட்டியையும் நாய் கடித்ததில் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முகமது அபிதா இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி சுல்தான் பீவி இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. குழந்தை காலையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த நாய் ஒன்று வீட்டினுள் புகுந்து குழந்தையைக் கண்டித்துள்ளது. உடனடியாக அருகில் இருந்த குழந்தையின் பாட்டி மல்லிகா பீவியும் குழந்தையைக் காப்பாற்ற முயன்றபோது அவரையும் நாய் கடித்தது.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் உடனடியாகத் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். வீட்டினுள் நுழைந்து நாய் கடிப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback