3 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை கல்வி மாணவிகளுக்கு மாதம் 500 உதவித்தொகை - தமிழக அரசு அறிவிப்பு
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாகக் கிராமப்புற சிறுபான்மையின பள்ளி மாணவியருக்கு ரூ. 1000 வரை ஊக்கத்தொகை வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
சிறுபான்மையின கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், கல்வியின் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு ஊக்கத்தொகை
3 ஆம் வகுப்பு முதல் 5 வரை மாணவியருக்கு ரூ. 500
6 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ.1000
பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் இருக்க வேண்டும்.
2024-2025 ஆம் கல்வியாண்டில் ரூ. 149.42 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான காலை உணவை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணிகள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி (6-10 வகுப்பு), வண்ணப் பென்சில்கள் (3-5 வகுப்பு), மற்றும் வண்ணக் கிரையான்கள் வழங்கப்படுகின்றன.
பள்ளி மாணவிகளுக்கு இலவச பேருந்து அட்டைகள் வழங்கப்படுகின்றன.
6 முதல் 12-ஆம் வகுப்புவரை அரசு பள்ளிகளில் பயின்று, உயர்கல்வியில் சேர்ந்த பெண் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- பட்டப்படிப்பு முடியும் வரை வழங்கப்படுகிறது.
கல்வி இடைநிற்றலை குறைக்க, 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது,
தற்போது தமிழ்நாடு அரசு, சிறுபான்மை நலத்துறை சார்பில், கிறாமப்புற சிறுபான்மை மாணவிகளுக்கான கல்வி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.
கல்வி இடைநிறுத்தம் குறையும் வகையில், சிறுமிகள் பள்ளியில் தொடர்ந்து பயில ஊக்குவிக்கவும், பெற்றோர் பொருளாதார சுமையைக் குறைக்கவும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கிராமப்புறப் பெண் மாணவிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்போது, 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புவரை ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
6 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள்