சந்தையில் வந்தாச்சு மிகவும் விலை குறைவான ஹால்மார்க் 9 காரட் தங்கம் முழு விவரம் What is 9kt Gold
சந்தையில் வந்தாச்சு மிகவும் விலை குறைவான 9 காரட் தங்கம் முழு விவரம்
24 காரட் தங்கம் என்பது வேறு எந்த உலோகங்களும் சேர்க்காத 99.9 தூய்மையான சுத்தமான தங்கமாகும்
ஆனால் 9 காரட் தங்கத்தில் 37.5% மட்டும் தூய்மையான தங்கமும், மீதமுள்ள 62.5% செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற அலாய் உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். அதாவது 9 கேரட் தங்கத்தில் 1000 கிராமில் 375 மட்டுமே சுத்தமான தங்கம் இருக்கும். மீதி அனைத்தும் உலோகம் கலந்து இருக்கும்
தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு தினம் தினம் உயர்ந்து கொண்டே உள்ளது. இதனால் தங்கம் வாங்குவது குறித்து நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது.
தங்கவிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் ஜூன் 2025-ம் ஆண்டில் தங்க விற்பனை 60% குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்க நகைகளை எளிதில் வாங்கக் கூடியதாக மாற்றுவதற்காக, இந்திய அரசு இந்திய தரநிலைகள் பணியகத்தின் (BIS) கீழ் கட்டாய ஹால்மார்க்கிங் முறையின் கீழ் 9 காரட் தங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,053க்கும் ஒரு சவரன் ரூ.80,424க்கும் (நேற்றைய விலை)விற்பனையாகிறது. அதேநேரத்தில் 9 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,700க்கும், ஒரு சவரன் ரூ.29,600க்கும் விற்பனையாகிறது.
Tags: இந்திய செய்திகள்