Breaking News

உத்தரகண்ட்டில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்கள் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

உத்தரகண்ட் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமம் - அதிர்ச்சி வீடியோ






உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்தன. இதுவரை 17 பேரி பலியாகி உள்ளனா். சம்பவ இடத்தில் பேரிடர் மீட்பு குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் இன்று திடீரென மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த மேகவெடிப்பினை தொடர்ந்து அங்கு கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாவும், மண்ணில் பலர் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது.

இந்த வெள்ளம் தொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. 

பாய்ந்து வரும் வெள்ளத்தில் சிக்கி குடியிருப்புகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வரை 1000 பேர் மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாயமானவர்கள் குறித்தும், வீடு, குடியிருப்புகளில் சிக்கியர்களை மீட்பது குறித்து பேரிடர் மீட்பு குழு திட்டமிட்டு வருகிறது. 

காட்டாற்று வெள்ளத்திற்கு மத்தியில் ராணுவம், துணை ராணுவம் இணைந்து மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளன. இந்த வெள்ளத்தில் கரையோர கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. 

சுமார் 25 தங்கும் விடுதிகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. எனவே பலி எண்ணிக்கை பெரியளவு இருக்கும் என கூறப்படுகிறது.ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் கேரளாவின் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இருந்தது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1952685679290560913

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/shilpa_cn/status/1952692765894262918

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback