பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு முழு விவரம் Australia will recognise Palestine
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு முழு விவரம் Australia will recognise Palestine
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கத் தயார் என ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி (Anthony Albanese) அறிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச்சபைக் கூட்டத்தில் ஆஸ்திரேலியா பாலஸ்தீனத் தனிநாடு உருவாவதை அங்கீகரிக்கும் என்று அல்பனீசி தெரிவித்துள்ளார்
காஸாவில் நீடிக்கும் பூசலையும் பட்டினியையும் முடிவுக்குக் கொண்டுவரவும் மத்திய கிழக்கில் தொடரும் வன்முறையை நிறுத்துவதற்கு இருநாட்டு முறையே சிறந்த தீர்வு என்று அவர் குறிப்பிட்டார்.
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப்போவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது கூட்டத்தொடரில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவும் அங்கீகரித்துள்ளது.
ஜி20 நாடுகளைப் பொறுத்தவரை அர்ஜென்டினா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. அதேநேரம் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட மேஜர் நாடுகள் இதுவரை பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: வெளிநாட்டு செய்திகள்